சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 131ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை இனி பார்க்கலாம்…
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில், ஆயிரத்து 488 பேரும், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 253 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 188 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 96 பேரும், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் 924 பேரும், வளசரவாக்கத்தில் 740 பேரும், அடையாறில் 619 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அம்பத்தூரில் 472 பேருக்கும், திருவொற்றியூரில் 322 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.