சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 737 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில், ஆயிரத்து 798 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 662 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 661 பேரும், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 556 பேரும்,கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் ஆயிரத்து 237 பேரும், வளசரவாக்கத்தில் 871 பேரும், அடையாறில் 834 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 563 பேருக்கும், திருவொற்றியூரில் 484 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.