கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளதாக, பிரதமர் மோடி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல நகரங்கள் தமைப்படுத்தப்பட்ட போதிலும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.