கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது, எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு செயற்கை சுவாம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.