இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 38 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 10 லட்சத்து 57 ஆயிரத்து 806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 35 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 798ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 403 பேரும், ஆந்திர பிரதேசத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 557 பேரும், கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 632 பேரும், உத்தர பிரதேசத்தில் 81 ஆயிரத்து 39பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 67 ஆயிரத்து 692 பேரும், தெலங்கானாவில் 60 ஆயிரத்து 717 பேரும், குஜராத்தில் 60 ஆயிரத்து 465 பேரும், பீகாரில் 48 ஆயிரத்து 477 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல்,ராஜஸ்தான், அசாம், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Exit mobile version