மகாராஷ்டிராவில் 75 நாட்களுக்கு பிறகு, புதிய கொரோனா பாதிப்பு மீண்டும் ஐந்தாயிரத்தை கடந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர அமைச்சர்களான ராஜேஷ் தோப், ஜெயந்த் படீல் உட்பட மும்பையில் 736 பேருக்கும், மாநிலம் முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமராவதி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை புறநகர் ரயில்களில் மாஸ்க் அணியாமல் செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபங்கள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.