கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 விநாடிகளில் கண்டறியும் அதிநவீன கருவியை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக இணைந்து கண்டறிய முடிவு செய்துள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், முடிவுகள் வருவதற்கு சில மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை 30 விநாடிகளில் கண்டறியும் அதிநவீன கருவியை இணைந்து உருவாக்க இந்தியாவும், இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டுக்குழு ஈடுபட உள்ளது. அதிநவீன பரிசோதனை கருவியை உருவாக்கும் பணியை மேற்கொள்ள, இஸ்ரேல் குழு விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.