கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசு!

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 85-பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயை தேசிய பேரிடராக இந்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவைத்தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். `கொரோனா’ வைரஸ் பாதிப்பைக்கண்டு யாரும் அச்சப்படத்தேவையில்லை என்றும் சட்டப்பேரவையில் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனோ வைரஸ் (COVID – 19) தமிழ் நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் கீழ் அறிவிக்கப்பட்ட  நோய் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக  தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்க்கு எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், தமிழக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்கள்  மீது இதன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்.

Exit mobile version