சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள், கடுமையான நிமோனியா மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். வூஹான் நகரில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ஏற்கெனவே பலியான நிலையில், தற்போது மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதனால், கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. வூஹான் நகர சுகாதாரத்துறை இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், கொரோனோ வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது, சீன மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கொரோனோ வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.