சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425-ஆக உயர்ந்துள்ளது. 20 ஆயித்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், உகான் மாகாணத்தில் அதிகபாதிக்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தநிலையில், சீனாவில், மேலும், 3 ஆயிரத்து 325 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்நாடு முழுவதும் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 438ஆக உயர்ந்துள்ளது. நோய் தாக்கம் காரணமாக, அந்நாட்டில் மேலும் 64 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, ஏற்கெனவே சர்வதேச அவசரநிலையை பிறப்பித்துள்ளது. இந்தநிலையில், சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினருடன், உலக சுகாதார அமைப்பினர் விரைவில் அந்நாட்டுக்கு சென்று, நோய் வேகமாகப் பரவுவதற்கான காரணம் குறித்த விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.