ஜூலை 24ம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி – கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான்

ஜூலை 24ம் தேதி ஒலிம்பிக் போட்டி துவங்கவுள்ள நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் நாடு உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 40 நாடுகள் வரை பரவி இதுவரை 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 788 ஆக உள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஜூலை 24ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவது கவலை அளிப்பதாகவுள்ளது. 2 வாரங்களில் இந்த வைரஸை கட்டுப்படுத்தாவிட்டால் ஒலிம்பிக் போட்டி நடப்பதில் சிக்கல்கள் உருவாக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலமையை உணர்ந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அங்குள்ள பள்ளிக்கூடங்களை மூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பானை பொருத்தமட்டில் கவுன்சில்கள் தான் பள்ளிக்கூடங்களை நடத்துகின்ற என்பதால், உள்ளாட்சி கவுன்சில்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். தென்கொரியாவில் 571 பேரும், இத்தாலியில் 650 பேரும், ஸ்பெயின் நாட்டில் 23 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Exit mobile version