சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனை!!

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பை மருந்தை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தி பரிசோதிக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில், பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு ( CoviShield ) என்ற தடுப்பு மருந்தை தயாரிக்க, புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனை முடிவடைந்த நிலையில், 2ம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கோவிஷீல்டு மருந்து செலுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட உள்ளது. சென்னையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version