கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் கூடிய நிலையில், மருந்து இருப்பு இல்லை என முகாம்களில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிலர் திரும்பி சென்ற நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

இதனால் குழப்பம் அடைந்த மக்கள் முகாம்களில் வெகுநேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அவதியடைந்தனர்.

 

Exit mobile version