தஞ்சை மாவட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிசீல்ட் தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தஞ்சையில் முன் களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என பிரிக்கப்பட்டு 117 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. முன் களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், மற்றவர்களுக்கு தடுப்பு ஊசி வந்தவுடன் செலுத்தப்படும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.