அம்மா மினி கிளினிக்கில் ஏப்.1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்!

வருகிற ஒன்றாம் தேதி முதல் அம்மா மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகாரித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சுகாதாரத்துறை பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து 900 அம்மா மினி கிளினிக்குகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் விரைவுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை தமிழ்நாடு முழுவதும், 24 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரைவில் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version