15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஜனவரி மூன்றாம் தேதி முதல்,15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், இதற்கான முன்பதிவு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்றும், கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளத்தில், 15 முதல் 18 வயதுடைய சிறார்கள், தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்பதிவு செய்ய ஆதார் அட்டை இல்லாதவர்கள், 10ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை சமர்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு ஏற்பாடாக, கோவின் இணையதளத்தில் அடையாள அட்டை பட்டியலில், 10ஆம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இணையதள தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.

Exit mobile version