இந்தியாவில் ஒரே நாளில் 90 ஆயிரத்து 802 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில், பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 16 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 90 ஆயிரத்து 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து நான்காயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 9 லட்சத்து 7 ஆயிரத்து 212 பேருக்கும், ஆந்திராவில் நான்கு லட்சத்து 98 ஆயிரத்து 125 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 551 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 283 பேரும், டெல்லியில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 449 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மேற்குவங்கம், பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.