ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா!

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சரான பீட்டர் டட்டனுக்கு காய்ச்சலுடன் இருமல் இருந்த நிலையில், குயின்ஸ்லாண்ட் சுகாதாரத்துறை அவரை பரிசோதித்தது. இதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பீட்டர் அண்மையில், அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் பயணித்த அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Exit mobile version