உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் கொரோனா?!

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா என்ற வைரஸால் இதுவரை உலக முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 நாடுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 148 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என ஐ.நா.வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கணித்துள்ளது. மனித இழப்புகளைத் தவிர அதைத் தாண்டிய பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால், 1 லட்சம் கோடி டாலர் இந்த ஆண்டில் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version