கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு

கொரோனா எதிரொலியாக ஒலிம்பிக் போட்டிகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டென்னிஸ் போட்டிகளில் புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வரும் ஜூன் 29 ம் தேதி துவங்க இருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாக போட்டியை நடத்தும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த முடிவு அவ்வளவு எளிதாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும் அனைவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆம் உலக போருக்கு பிறகு தற்போதுதான் முதன் முறையாக விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், விம்பிள்டனின் 134 ஆவது போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version