தமிழகத்தில் புதிய வகை கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலம் தலைமைச்செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மரபியல் மாற்றமடைந்து உருமாறிய புதிய வகை கொரோனா தமிழக மாவட்டங்களில் புகுந்து விடாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டார். சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதன் தொற்று சதவீதம் 2-க்கும் அதிகமாக உள்ளது எனவும், இதனை ஒன்றுக்கும் குறைவாக கொண்டு வருவதோடு முற்றிலும் ஒழிக்க வேண்டும் வேண்டும் என தலைமைச் செயலாளர் பேசினார்.