கொரோனா தடுப்பு நடவடிக்கை பந்தில் எச்சில் தேய்க்க தடை!!

கிரிக்கெட் போட்டியின் போது எச்சிலால் பந்தினை தேய்க்க தடை விதிக்கப்படுவதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, பந்தினை எச்சில் மூலம் தேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தின் மீது எச்சில் தேய்ப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அணி இரண்டு முறை எச்சரிக்கப்படும் என்றும், அதையும் மீறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால், சர்வதேச போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளின் போது வீரர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் இது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு பொருந்தாது எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.

Exit mobile version