தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 276 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 276 பேரில், 2 ஆயிரத்து 593 பேர் ஆண்களும், ஆயிரத்து 683 பேர் பெண்களும் அடங்குவர்.அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 427 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 199 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 154 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 30 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்றும் வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.