சேலம் அரசு மருத்துவமனையில் வெளியேற்றப்படும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நெருக்கடி காரணமாக நோயாளிகளின் உறவினர்களை வெளியேறுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் செவிலியர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும், சரியான நேரத்தில் உணவு, மருந்து போன்றவை வழங்குவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
Discussion about this post