தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய கொரோனா நோயாளி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உயிரிழந்த தாய்க்கு கொரோனா நோயாளியான மகன் பாதுகாப்பு உடை அணிந்து இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பா நேரி பகுதியைச் சேர்ந்த 75 வயதான மின்னல் என்ற மூதாட்டி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இச்சம்பவத்தின் போது அவரது மகன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தகவல் அறிந்த மகன் முருகேசன், தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மருத்துவர்களிடம் அனுமதி கேட்டு மன்றாடி உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் முருகேசனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தாயின் உடல் அருகே நின்று தொட்டுக் கூட பார்க்க முடியாமல், மகன் கண்ணீர் வடித்தது, அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

Exit mobile version