சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளதால், விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள என்.எஸ்.கே நகரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், கொரோனா பாதிப்பு குறையத் துவங்கியுள்ள நேரத்தில், முகக் கவசம் அணிவதை மக்கள் நிறுத்தினால் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் அடுத்த 3 மாதத்திற்கு முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றார்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.