தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 958 பேரில் 3 ஆயிரத்து 652 ஆண்களுக்கும், 2 ஆயிரத்து 306 பெண்களுக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 484 பேருக்கும், கடலூரில் 286 பேருக்கும், திருவள்ளூரில் 280 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 294 பேருக்கும், சேலத்தில் 451 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 5 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 85 புள்ளி 09 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் மேலும் 118 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 52 ஆயிரத்து 362 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version