ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், பக்தர்களுடன் அர்ச்சகர்களுக்கு நேரடியான தொடர்பு இல்லாத நிலையில், எப்படி வைரஸ் பரவல் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராக உள்ளதாக கூறினார். இதனிடையே, அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், சுவாமி தரிசன அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமனதீட்சதலு வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version