அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், ஜூன் 30-க்குள் சென்னையில் கொரோனா தாக்கம் குறை வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பணியாளர்களை
சந்தித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தண்டையார்பேட்டையில் 120-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்ப தலைவர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இல்லை என கூறப்படுவது தவறான தகவல் எனவும், அரசு மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.