இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 136 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3 லட்சத்து 8 ஆயிரத்து 751 பேர் சிகிச்சையில் உள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிய இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version