தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு, மீண்டும் ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைத்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனால் மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும், ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஆயிரத்து 631 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 235 பேரும், சென்னையில் 174 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 137 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 133 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 113 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.