இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் அதிகளவாக 4 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 706ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லியில் 9 ஆயிரத்து 333 பேரும், ராஜஸ்தானில் 4 ஆயிரத்து 960 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 789 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 258 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 34 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 120 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.