ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கொரோனா!

ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 147 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் பிரதான கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நபரும் ஆளுநருடனோ அல்லது உயர் அதிகாரிகளுடனோ நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version