ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 38 பேருக்கு, கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் பன்வாரிலாலுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், எனினும் அவரை மருத்துவர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version