திருச்சி பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தொழிற்சாலை வரும் திங்கள்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.
திருச்சியில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்காக தொழிற்சலை வளாகத்தில் குடியிருப்புகளும் உள்ளன.
இந்நிலையில் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தொழிற்சாலை வரும் திங்கள்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் திங்கள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தொழில்சாலையை அடுத்த 2 வாரங்களுக்கு மூடுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.