சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுபாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஒவ்வொரு மண்டலத்திற்கு அபராத தொகையை நிர்ணயித்து மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம். முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம், உடற்பயிற்சி மையம் பொது இடங்கள், முடி வெட்டும் இடம் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.