தமிழக அரசு முன்கூட்டியே வகுத்த திட்டங்களால், மாநிலத்தில் நோய் பரவல் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் 16 CT SCAN உட்பட அதிநவீன கருவிகளுடன் உருவாக்கப்பட்ட கொரோனா சிறப்பு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனாவுக்கு முப்பரிமாண முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், 90 சதவீதம் பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இரண்டாம் அலை ஏற்படாமல் இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.