பழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரிசோதனை செய்து, முடிவுக்காக காத்திருப்பவர்கள் என தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் இரு பிரிவுகளிலும் தங்க வைக்கப்பட்டவர்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பழநி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்படும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தியுள்ள நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்ததும் மாற்று சிலிண்டர் கொடுக்காமல் மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக கூறி நோயாளியின் குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.