கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உண்மையான இறப்பு சான்றிதழ்களை வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, தமிழ்நாடு அரசுக்கு சென்ன உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு, இறப்பு சான்றிதழில், கொரோனா மரணம் என்று அளிக்கும்படி உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட குழுக்கள், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31ம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை தமிழ்நாடு அரசு கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.