கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால், ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டதால், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஆட்சியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version