இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.