இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பிறகு, கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு நாள் தொற்று பாதிப்பு 58 ஆயிரத்து 419ஆக பதிவாகி இருந்த நிலையில், தற்போது 42 ஆயிரத்து 640ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 81,839 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 26 ஆயிரத்து 38ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 167 உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோரின் விகிதம் 96 புள்ளி 49 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1 புள்ளி 30 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குவது குறிப்பிடத்தக்கது.