கோவை, ஈரோடு மாவட்டங்களில் குறையாத கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில், கொரோனா தினசரி பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உட்பட, புதிதாக 11 ஆயிரத்து 805 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 215 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 727 பேர் ஆண்கள் என்றும், 5 ஆயிரத்து 78 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 793 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆயிரத்து 12 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 563 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 270 பேரும், சேலத்தில் 759 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 728 பேரும், தஞ்சாவூரில் 541 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 ஆயிரத்து 207 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 267 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 148 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 119 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version