கொரோனாவால் இறந்தவர்களின் குடுமபத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வலியுறுத்திய ஸ்டாலின், தற்போது அதில் 50 லட்சமாவது கொடுக்க முன் வருவாரா என்று அதிமுக உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ண முரளி, கடையநல்லூரில் சித்தா பல்கலைகழகம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் கடையநல்லூரில் இணைக்கப்படாமல் இருக்கும் கிராமங்களை இணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்த அவர், கடைமடை வரை நீர் செல்ல வசதியாக, சிமெண்ட் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ், அம்மா முழு உடல் பரிசோதனை மையம், மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான தொகையை 2 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது உள்ளிட்ட அதிமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொரோனாவால் இறந்தவர்களின் குடுமபத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வலியுறுத்திய ஸ்டாலின்,
தற்போது அதனை 50 லட்சமாவது கொடுக்க முன் வருவாரா என்றும் கேள்வி எழுப்பினார்.