கோவை மாவட்டம் அன்னூரில், அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா கேர் சென்டர், பயன்பாட்டுக்கு வராதது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அன்னூர் நவபாரத் பள்ளியில் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரானோ சிகிச்சை மையத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 31ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் அன்னூர் பகுதியில் தொற்று பாதித்தவர்கள் அங்கு சென்றபோது அவர்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 20 படுக்கைகள் கொண்ட அன்னூர் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருப்பதாக கலங்கும் தொற்று பாதித்தவர்கள், போர்க்கால அடிப்படையில் சிகிச்சை மையத்தை உடனடியாக திறக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.