கடலூரில் கொரோனா விழிப்புணர்வு ; ஓவியத்தின் முன் கைகளை கூப்பி வணங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்!

கடலூரில் கொரோனா விழிப்புணர்வு ஓவியத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் என அனைவரும் கைகூப்பி வணங்கினர். கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே வரையப்பட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு  ஓவியத்தின் முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கைகூப்பி வணங்கினர்.  கைகளை கழுவுவது, சுத்தமாக வைப்பது, சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்

Exit mobile version