இந்தியாவில் ஒரேநாளில் 48,661 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 48 ஆயிரத்து 661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 67 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 லட்சத்து 85 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 32 ஆயிரத்து 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 531 பேரும், கர்நாடகத்தில் 90 ஆயிரத்து 942 பேரும், ஆந்திராவில் 88 ஆயிரத்து 671 பேரும், உத்தரபிரதேசத்தில் 63 ஆயிரத்து 742 பேரும், மேற்குவங்கத்தில் 56 ஆயிரத்து 377 பேரும், குஜராத்தில் 54 ஆயிரத்து 626 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெலங்கானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version