இந்தியாவில் ஒரேநாளில் 45,720 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 720 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 7 லட்சத்து 82 ஆயிரத்து 606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 29 ஆயிரத்து 861 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 323 பேரும், கர்நாடகத்தில் 75 ஆயிரத்து 833 பேரும், உத்தர பிரதேசத்தில் 55 ஆயிரத்து 588 பேரும், குஜராத்தில் 51 ஆயிரத்து 399 பேரும், தெலங்கானாவில் 49 ஆயிரத்து 259 பேரும், மேற்குவங்கத்தில் 49 ஆயிரத்து 321 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

 

Exit mobile version