தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பிருப்பதால், மருத்துவத்துறையினர் தயாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பிருப்பதாகவும்,  இதில்18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் மருத்துவமனை இயக்குநர்கள், முதல்வர்கள் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.  எந்நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டுமென கூறியுள்ள அவர்,  ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.  ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு பிரிவு படுக்கைகளும் ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்த வேண்டுமென்றும், செவிலியர்களை அவசரகால பணிக்கு தயார்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களும் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version