நடைபெற உள்ள நான்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு காணிக்கை ஆக்குவோம் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள மடலில், அதிமுக வெற்றிக்காக அயராது பாடுபட்டு வரும் தொண்டர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகதான் தமிழகத்தை ஆளும் என்று அவர்கள் குறிப்பிடுள்ளனர். நீதியும் தர்மமும் நிலைமாலை சூட விரோதமும், துரோகமும் நிலைகுலைந்து ஓட உழைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். வெற்றி கோப்பைகளோடு மே23 ஆம் தேதி உற்சாகம் துள்ளி வர காத்திருக்கும் உங்களை வரவேற்க காத்திருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.